Jamakkol Prasannam Software

ஜாமக்கோள் பிரசன்னம் சாஃப்ட்வேர்

🌅 சூரிய உதயம் 05:58 AM
🌇 சூரிய அஸ்தமனம் 06:37 PM
தற்போதைய கௌரி நிலை: ✅ சுகம் (சுபம்)
மீனம்
1
சந் 330° 29'மீனம் ராசி:
பூரட்டாதி - 4
சனி
(20° 30')
மிருத்யு (5°50')
உதயம்
(15°11')
மேஷம்
2
சனி 15° 29'மேஷம் ராசி:
பரணி - 1
ரிஷபம்
3
செவ்வாய்
(22° 37')
லக் (15°00')
மிதுனம்
4
சுக் 60° 29'மிதுனம் ராசி:
மிருகசீரிஷம் - 3
புதன் (வ)
(22° 08')
மாந் (11°50')
கும்பம்
12
ராகு (வ)
(6° 01')
ஜாமக்கோள் பிரசன்னம்

Thu, 23-Jul-2026 02:29:01 AM

Wednesday Jamam # 6

உதயம்
★ உத்திரட்டாதி - 4
ஆருடம்
★ சித்திரை - 1
கவிப்பு
★ சித்திரை - 4
jamakkolprasannam.com
கடகம்
5
புத 105° 29'கடகம் ராசி:
பூசம் - 4
சூரியன்
(5° 50')
குரு
(10° 42')
மகரம்
11
பாம்பு 285° 29'மகரம் ராசி:
திருவோணம் - 2
எம (5°50')
சிம்மம்
6
சுக்கிரன்
(20° 10')
கேது (வ)
(6° 01')
தனுசு
10
சூரி 240° 29'தனுசு ராசி:
மூலம் - 1
விருச்சிகம்
9
துலாம்
8
செவ் 195° 29'துலாம் ராசி:
சுவாதி - 3
சந்திரன்
(21° 41')
கவிப்பு
(5°53')
கன்னி
7
குரு 150° 29'கன்னி ராசி:
உத்திரம் - 2
ரா.கா (5°50')
ஆருடம்
(24°06')
உங்கள் கேள்வியை இங்கே உள்ளீடு செய்யுங்கள்

Save a copy of this chart and notes in your email.

Get it on Google Play
எளிமையாக ஜாமக்கோள் பிரசன்னம் பார்த்தல்
Advance Jamakkol Prasannam

கிரகப் பார்வைகள் (கோச்சாரம் & ஜாமம்)

பார்க்கும் கிரகம்பார்க்கப்படும் கிரகங்கள்
ஜா.சனி (மேஷம்)ஜா.சுக்கிரன், கோ.புதன், ஜா.செவ்வாய், கோ.சந்திரன், ஜா.ராகு
கோ.செவ்வாய் (ரிஷபம்)கோ.கேது, கோ.சுக்கிரன், ஜா.சூரியன்
ஜா.சுக்கிரன் (மிதுனம்)ஜா.சூரியன்
கோ.புதன் (மிதுனம்)ஜா.சூரியன்
கோ.சூரியன் (கடகம்)ஜா.ராகு
கோ.குரு (கடகம்)ஜா.ராகு, ஜா.சந்திரன், கோ.சனி
ஜா.புதன் (கடகம்)ஜா.ராகு
கோ.கேது (சிம்மம்)ஜா.சனி, ஜா.சூரியன், கோ.ராகு
கோ.சுக்கிரன் (சிம்மம்)கோ.ராகு
ஜா.குரு (கன்னி)கோ.செவ்வாய், ஜா.ராகு, ஜா.சந்திரன், கோ.சனி
ஜா.செவ்வாய் (துலாம்)ஜா.சனி, கோ.செவ்வாய், ஜா.ராகு
கோ.சந்திரன் (துலாம்)ஜா.சனி
ஜா.சூரியன் (தனுசு)ஜா.சுக்கிரன், கோ.புதன்
ஜா.ராகு (மகரம்)கோ.செவ்வாய், கோ.சூரியன், கோ.குரு, ஜா.புதன், ஜா.குரு
கோ.ராகு (கும்பம்)ஜா.சுக்கிரன், கோ.புதன், கோ.கேது, கோ.சுக்கிரன், ஜா.செவ்வாய், கோ.சந்திரன்
ஜா.சந்திரன் (மீனம்)ஜா.குரு
கோ.சனி (மீனம்)கோ.செவ்வாய், ஜா.குரு, ஜா.சூரியன்

கிரகச் சேர்க்கை (பாகை அடிப்படையில்)

உதயத்தில் நின்ற கிரகங்கள்:ஜா.சந்திரன் (0°29') | கோ.சனி (20°30')
ஆருடத்தில் நின்ற கிரகங்கள்:ஜா.குரு (0°29')
கவிப்பில் நின்ற கிரகங்கள்:ஜா.செவ்வாய் (15°29') | கோ.சந்திரன் (21°41')
உதயாதிபதி இணைந்த கிரகங்கள்:கோ.சூரியன் (5°50') | கோ.குரு (10°42') | ஜா.புதன் (15°29')
ஜா.குரு (0°29')
ஆருடாதிபதி இணைந்த கிரகங்கள்:ஜா.சுக்கிரன் (0°29') | கோ.புதன் (22°08')
கோ.சூரியன் (5°50') | கோ.குரு (10°42') | ஜா.புதன் (15°29')
கவிப்பு அதிபதி இணைந்த கிரகங்கள்:கோ.கேது (6°01') | கோ.சுக்கிரன் (20°10')
ஜா.சுக்கிரன் (0°29') | கோ.புதன் (22°08')

முக்கிய பிரசன்ன குறிப்புகள்

  • உதயத்தில் நின்ற கிரகம் பார்க்கும் கிரகங்கள்: (ஜா.சந்திரன் -> ஜா.குரு), (கோ.சனி -> கோ.செவ்வாய், ஜா.குரு, ஜா.சூரியன்)
  • உதயத்தை பார்க்கும் கிரகங்கள்: கோ.குரு, ஜா.குரு
  • உதயத்திலிருந்து ஆருடம் உள்ள இடம்: 7
  • ஆருடத்திலிருந்து உதயம் உள்ள இடம்: 7
  • ஆருடத்தில் நின்ற கிரகம் பார்க்கும் கிரகங்கள்: (ஜா.குரு -> கோ.செவ்வாய், ஜா.ராகு, ஜா.சந்திரன், கோ.சனி)
  • ஆருடத்தை பார்க்கும் கிரகங்கள்: ஜா.ராகு, ஜா.சந்திரன், கோ.சனி
  • உதயம் அடுத்ததாக தொட இருக்கும் கிரகம்: கோ.சனி (350°)
  • ஆருடம் அடுத்ததாக தொட இருக்கும் கிரகம்: ஜா.செவ்வாய் (195°)
  • கவிப்பை பார்க்கும் கிரகங்கள்: ஜா.சனி, கோ.ராகு
  • கவிப்பில் நின்ற கிரகம் பார்க்கும் கிரகங்கள்: (ஜா.செவ்வாய் -> ஜா.சனி, கோ.செவ்வாய், ஜா.ராகு), (கோ.சந்திரன் -> ஜா.சனி)
  • கவிப்பு அடுத்ததாக தொட இருக்கும் கிரகம்: ஜா.குரு (150°) (பின்னோக்கி)

உதயம், ஆருடம், கவிப்பு வீடுகளில் நின்ற கிரகங்களின் நிலை

புள்ளிகிரகம்கோச்சாரம் / ஜாமம்நிலைகள் (ஆட்சி/உச்சம்/வக்ரம்...)
உதயம் (மீனம்)சந்திரன்ஜாமம்-
உதயம் (மீனம்)சனிகோச்சாரம்-
ஆருடம் (கன்னி)குருஜாமம்-
கவிப்பு (துலாம்)சந்திரன்கோச்சாரம்-
கவிப்பு (துலாம்)செவ்வாய்ஜாமம்-

உதய, ஆருட, கவிப்பு அதிபதிகளின் நிலை

அதிபதிகிரகம்நின்ற ராசிகோச்சாரம் / ஜாமம்நிலைகள்
உதயம் அதிபதிகுருகடகம்கோச்சாரம்உச்சம், அஸ்தங்கம்
உதயம் அதிபதிகுருகன்னிஜாமம்-
ஆருடம் அதிபதிபுதன்மிதுனம்கோச்சாரம்ஆட்சி, வக்ரம், அஸ்தங்கம்
ஆருடம் அதிபதிபுதன்கடகம்ஜாமம்-
கவிப்பு அதிபதிசுக்கிரன்சிம்மம்கோச்சாரம்-
கவிப்பு அதிபதிசுக்கிரன்மிதுனம்ஜாமம்திக்பலம்

சிறப்புக் குறிப்புகள்

  • கிரக பரிவர்த்தனை ஏதுமில்லை.
  • இந்த ஜாமத்தில் நீசமடைந்த ஜாம கிரகங்கள்: சனி

தற்போதைய பிரசன்னத்தின் ராசி மற்றும் கிரக கதிர்கள்

கிரகம்ராசிநிலை /
நின்ற கிரகம்
கிரக கதிர்ராசி கதிர்
உதயம்மீனம்கோ.சனி, ஜா.சந்திரன்2527
ஆருடம்கன்னிஜா.குரு1011
உதயத்தின் 10ம் இடம்தனுசுஜா.சூரியன்156
கோச்சாரம் - சூரியன்கடகம்-53
கோச்சாரம் - சந்திரன்துலாம்-212
கோச்சாரம் - செவ்வாய்ரிஷபம்-88
கோச்சாரம் - புதன்மிதுனம்அஸ்தங்கம்05
கோச்சாரம் - குருகடகம்அஸ்தங்கம்03
கோச்சாரம் - சுக்கிரன்சிம்மம்-207
கோச்சாரம் - சனிமீனம்-427
கோச்சாரம் - ராகுகும்பம்-48
கோச்சாரம் - கேதுசிம்மம்-47
ஜாமம் - சூரியன்தனுசுதிக்பலம்156
ஜாமம் - சந்திரன்மீனம்-2127
ஜாமம் - செவ்வாய்துலாம்-82
ஜாமம் - புதன்கடகம்-163
ஜாமம் - குருகன்னி-1011
ஜாமம் - சுக்கிரன்மிதுனம்திக்பலம்605
ஜாமம் - சனிமேஷம்நீசம்27
ஜாமம் - ராகுமகரம்-48

கோச்சார கிரக நிலைகள்

கிரகம் /
புள்ளி
ராசிபாகைநட்சத்திரம் -
பாதம்
Ascendantரிஷபம்15° 00'ரோகிணி - 2
சூரியன்கடகம்5° 50'பூசம் - 1
சந்திரன்துலாம்21° 41'விசாகம் - 1
செவ்வாய்ரிஷபம்22° 37'ரோகிணி - 4
புதன் (வ)மிதுனம்22° 08'புனர்பூசம் - 1
குருகடகம்10° 42'பூசம் - 3
சுக்கிரன்சிம்மம்20° 10'பூரம் - 3
சனிமீனம்20° 30'ரேவதி - 2
ராகு (வ)கும்பம்6° 01'அவிட்டம் - 4
கேது (வ)சிம்மம்6° 01'மகம் - 2

பிரசன்ன ஸ்புடங்கள்

கிரகம் /
புள்ளி
ராசிபாகைநட்சத்திரம் -
பாதம்
Udhayamமீனம்15° 11'உத்திரட்டாதி - 4
Aarudamகன்னி24° 05'சித்திரை - 1
Kavippuதுலாம்5° 54'சித்திரை - 4
Maandiமிதுனம்11° 50'திருவாதிரை - 2
Yamakandamமகரம்5° 50'உத்திராடம் - 3
Rahu Kaalamகன்னி5° 50'உத்திரம் - 3
Mrityuமீனம்5° 50'உத்திரட்டாதி - 1

ஜாம கிரக நிலைகள்

கிரகம் /
புள்ளி
ராசிபாகைநட்சத்திரம் -
பாதம்
ஜாம சந்திரன்மீனம்0° 29'பூரட்டாதி - 4
ஜாம பாம்புமகரம்15° 29'திருவோணம் - 2
ஜாம சூரியன்தனுசு0° 29'மூலம் - 1
ஜாம செவ்வாய்துலாம்15° 29'சுவாதி - 3
ஜாம குருகன்னி0° 29'உத்திரம் - 2
ஜாம புதன்கடகம்15° 29'பூசம் - 4
ஜாம சுக்கிரன்மிதுனம்0° 29'மிருகசீரிஷம் - 3
ஜாம சனிமேஷம்15° 29'பரணி - 1

ஜாமக்கோள் பிரசன்னம் என்றால் என்ன? - முழுமையான விளக்கம்

கடந்த கால நிகழ்வுகளையும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் சேர்த்து, எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவதே பிரசன்னம் ஆகும்.

பிரசன்னம் என்பது என்ன?

பிரசன்னம் (Prasannam) என்பது ஜோதிடத்தின் ஒரு முக்கிய சிறப்புப் பிரிவாகும். இது ஒருவரின் பிறப்பு ஜாதகத்தை (Birth Chart) அடிப்படையாகக் கொள்ளாமல், கேள்வி கேட்கப்படும் நேரத்திற்கு ஒரு ஜாதகம் கணித்து பலன் கூறும் முறை ஆகும். பிரஸ்னம் என்ற சொல்லே காலப்போக்கில் மருவி 'பிரசன்னம்' என மாறிவிட்டது.

நமது ஜோதிடத்தில் 36 வகையான பிரசன்னங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றதும், நவீன காலத்திற்கும் பயன்படும் வகையில் இருப்பதும் நமது ஜாமக்கோள் பிரசன்னம் முறையாகும்.

பிரசன்னமும் ஆகாச ஆவணமும் (Akashic Records)

நாம் செய்யக்கூடிய செயல்கள், மறைக்கக் கூடிய விஷயங்கள், நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும். இதை ஆகாச ஆவணம் (Akashic Records) என்று குறிப்பிடுவர்.

ரேடியோவில் உள்ள அலைவரிசை போன்று மனிதனின் எண்ணங்களும் அலைவரிசையில் பதிவு செய்யப்படும். பிரபஞ்சம் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு தகவலை கொடுக்க முயற்சி செய்கிறது. அதன் விளைவாக அவருக்குக் கேள்விகள் மனதில் தோன்றுகிறது. இந்தக் கேள்விக்கான பதில்கள் பிரபஞ்சத்திடம் உள்ளது.

பிரபஞ்சத்திற்கும் கேள்வி கேட்பவருக்கும் இடையே ஜோதிடராகிய நாம் ஊடகமாகச் செயல்பட்டு, பிரபஞ்சத்தின் பதிலை ஜாம கிரகங்கள் மூலம் பெற்றுத் தருகிறோம். இதையே ஜாமக்கோள் பிரசன்னம் என்று அழைக்கின்றோம்.

ஜாமக்கோள் பிரசன்னம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்

ஜாமக்கோள் கணக்கீடு: ஜாமம் + கோள்

ஒரு ஜாமம் என்பது 90 நிமிடத்தைக் குறிக்கும். இந்த 90 நிமிடத்தில் கோள் என்று குறிப்பிடக்கூடிய 8 ஜாமக் கிரகங்கள் ஆட்சி செய்யும். உலகத்தில் எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு இந்த ஜாமக் கிரகங்களே முக்கியக் காரணமாக இருக்கும்.

ஒரு நாளுக்கான ஜாமக் கணக்கீடு:

ஜாமக்கோள் கிரகங்கள்:

1. சூரியன் (கதிர்) | 2. செவ்வாய் (சேய்) | 3. குரு (பொன்) | 4. புதன் (மால்) | 5. சுக்கிரன் (புகர்) | 6. சனி (மந்தன்) | 7. சந்திரன் (மதி) | 8. பாம்பு (ராகு)

உதயம், ஆருடம், கவிப்பு - விளக்கம்

1. உதயம் (கடிகாரத்தில் சின்ன முள்)

உதயம் என்பது கேள்வியையும், கேள்விக்கு உரிய நபரையும், எதிர்காலத்தையும் குறிப்பிடும். இது ஒரு ராசியை (30 டிகிரி) கடக்க சுமார் 1 மணி நேரம் (60 நிமிடங்கள்) எடுத்துக்கொள்ளும். ராசி கட்டத்தில் முன்னோக்கிச் செல்லும்.

2. ஆருடம் (கடிகாரத்தில் நிமிட முள்)

ஆருடம் என்பது கடந்த கால நிகழ்விலிருந்து தற்சமயம் நடந்து கொண்டிருப்பது வரை குறிப்பிடும். இது 60 நிமிடங்களில் 12 ராசிகளையும் கடந்துவிடும். ஒரு ராசியைக் கடக்க 5 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இதுவும் முன்னோக்கிச் செல்லும்.

3. கவிப்பு (கடிகாரத்தில் நொடி முள்)

கவிப்பு என்பது ஒரு செயலைச் செய்தால் என்ன ஏற்படும் என்பதையும், விளைவுகளையும், ரகசியத்தையும் குறிப்பிடும். இதுவும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு ராசியைக் கடக்கும். ஆனால், ராசி கட்டத்தில் பின்னோக்கி (Anti-clockwise) செல்லும்.

எதற்கெல்லாம் பிரசன்னம் பார்க்கலாம்?

நவீன காலத்தில் மக்கள் அதிகமாக ஜோதிடரிடம் கேட்கும் பல கேள்விகளுக்குப் பிரசன்னம் மூலம் விடை காண முடியும். ஜாதகம் இல்லாதவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.

கீழ்க்காணும் 70 வகையான நிகழ்வுகளுக்கு ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கலாம்:

எப்பொழுது பிரசன்னம் பதில் கொடுக்காது?

பிரசன்னம் பார்க்க வருபவரும், பதிலளிப்பவரும் ஆத்மார்த்தமான சிந்தனையில் (மனம் ஒன்றி) இல்லாமல் இருந்தால் பிரசன்னம் பதில் அளிக்காது. ஆத்மார்த்தமான சிந்தனை இருப்பவர்களுக்குப் பிரசன்னம் ஒரு வரப்பிரசாதமே!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. ஜாமக்கோள் பிரசன்னம் என்றால் என்ன?

ஜாமக்கோள் பிரசன்னம் என்பது பழமையான மற்றும் துல்லியமான ஒரு தமிழ் ஜோதிட முறையாகும். ஒருவர் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் அந்த குறிப்பிட்ட நேரத்தின் கிரக நிலைகளை (உதயம், ஆருடம், கவிப்பு) அடிப்படையாகக் கொண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

2. ஜனன ஜாதகத்திற்கும் ஜாமக்கோள் பிரசன்னத்திற்கும் என்ன வித்தியாசம்?

ஜனன ஜாதகம் என்பது நீங்கள் பிறந்த நேரம், தேதி, இடத்தை வைத்து கணிக்கப்படுவது. ஆனால், ஜாமக்கோள் பிரசன்னம் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கேள்வியை ஜோதிடரிடம் கேட்கும் நேரத்தை வைத்து கணிக்கப்படுவதாகும்.

3. பிரசன்னம் பார்க்க பிறந்த தேதி மற்றும் நேரம் கட்டாயமா?

இல்லை, ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்க பிறந்த தேதி மற்றும் நேரம் அவசியமில்லை. உங்களுக்கு பிறந்த நேரம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்தக் கலையின் மூலம் துல்லியமான பலன்களை அறிய முடியும்.

4. ஒரு பிரசன்னத்தின் மூலம் எத்தனை கேள்விகளைக் கேட்கலாம்?

ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மற்றும் முக்கியமான கேள்வியை மட்டும் கேட்பது மிகவும் துல்லியமான பலனைத் தரும். பல கேள்விகளைக் குழப்பிக் கேட்பதை விட, மனதை ஒருமுகப்படுத்தி ஒரு கேள்வியைக் கேட்பதே சிறந்தது.

5. ஜாமக்கோள் பிரசன்னம் எந்த அளவு துல்லியமானது?

உடனடிப் பிரச்சனைகள், தற்போதைய குழப்பங்கள் மற்றும் எதிர்காலத்தின் குறுகிய கால நிகழ்வுகளைக் கணிப்பதில் ஜாமக்கோள் பிரசன்னம் மிகவும் துல்லியமானது. கேள்வியாளரின் நேர்மையான மனநிலையைப் பொறுத்து இதன் துல்லியம் அமையும்.

6. 'ஜாமம்' என்பதன் பொருள் என்ன?

ஒரு நாளின் பகல் பொழுதை 8 பிரிவுகளாகவும், இரவுப் பொழுதை 8 பிரிவுகளாகவும் பிரிப்பதே 'ஜாமம்' எனப்படும். ஒரு ஜாமம் என்பது ஒன்றரை (1.5) மணி நேரத்தைக் குறிக்கும். இந்த நேர அளவுகளைக் கொண்டே ஜாம கிரகங்கள் கணிக்கப்படுகின்றன.

7. ஆன்லைனில் அல்லது தொலைபேசியில் பிரசன்னம் பார்க்க முடியுமா?

நிச்சயமாக முடியும். நீங்கள் தொலைபேசியிலோ அல்லது ஆன்லைனிலோ தொடர்புகொண்டு கேள்வி கேட்கும் நேரத்தை ஜோதிடர் எடுத்துக்கொண்டு, அதற்கான பிரசன்ன சக்கரத்தை அமைத்து பலன் கூற முடியும்.

8. தொலைந்து போன அல்லது திருடு போன பொருட்களைக் கண்டுபிடிக்க முடியுமா?

ஆம், நஷ்டப் பிரசன்னம் என்ற முறையின் மூலம் காணாமல் போன பொருட்கள், ஆவணங்கள் எங்கு உள்ளன, அது திரும்பக் கிடைக்குமா அல்லது திருடியது யார் என்பது போன்ற விவரங்களை ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் அறியலாம்.

9. தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பங்குச்சந்தை முதலீடு பற்றி கேட்கலாமா?

தாராளமாகக் கேட்கலாம். புதிய தொழில் தொடங்கலாமா, வேலை மாறுவது நல்லதா, பங்குச்சந்தை போன்ற முதலீடுகளில் தற்போதைய காலகட்டத்தில் லாபம் கிடைக்குமா என்பதை பிரசன்ன கிரகங்களின் நிலைகளை வைத்துத் தெளிவாகக் கூற முடியும்.

10. மருத்துவப் பிரச்சனைகள் மற்றும் நோயின் தன்மை பற்றி கணிக்க முடியுமா?

ரோகப் பிரசன்னம் மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நோயின் தீவிரம், அதற்கான சரியான சிகிச்சை எப்போது கிடைக்கும், மற்றும் உடல்நலம் எப்போது சீரடையும் என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.

11. ஆருடம், உதயம், கவிப்பு - இவற்றின் பங்கு என்ன?

'உதயம்' என்பது கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள லக்னத்தையும் (சூழ்நிலை), 'ஆருடம்' என்பது கேட்பவரின் மன எண்ணத்தையும், 'கவிப்பு' என்பது அந்தச் செயலில் உள்ள தடைகள், மறைக்கப்பட்டுள்ள விஷயங்கள் அல்லது எதிர்பாராத திருப்பங்களையும் குறிக்கும்.

12. ஜாமக்கோள் சக்கரத்தில் உள்ள உள்கட்டம், வெளிக்கட்டம் என்றால் என்ன?

ஜாமக்கோள் சக்கரத்தில் உள்கட்டம் என்பது கோச்சர கிரகங்களின் (தற்போதைய வானியல் கிரகங்கள்) நிலையைக் குறிக்கும். வெளிக்கட்டம் என்பது கேள்வி கேட்கும் நேரத்திற்குரிய ஜாம கிரகங்களின் நிலையைக் குறிக்கும்.

13. திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் பற்றி அறிய முடியுமா?

ஆம். திருமணத் தடைகளுக்கான காரணங்கள், திருமணம் எப்போது கைகூடும், பொருத்தமான வரன் எத்திசையிலிருந்து அமையும் மற்றும் சந்தான பாக்கியம் எப்போது கிடைக்கும் போன்ற முக்கியமான கேள்விகளுக்கு விடை காணலாம்.

14. கேள்வி கேட்கச் சிறந்த நேரம் என்று ஏதேனும் உள்ளதா?

பிரசன்னம் கேட்க குறிப்பிட்ட நல்ல நேரம் என்று எதுவும் இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்சனையைப் பற்றிய விடையை அறிய வேண்டும் என்ற உந்துதல் எப்போது தீவிரமாக எழுகிறதோ, அந்த நேரமே பிரசன்னம் கேட்கச் சிறந்த நேரமாகும்.

15. பிரசன்னம் பார்க்கும் போது கேட்பவரின் மனநிலை எப்படி இருக்க வேண்டும்?

கேட்பவர் தனது கேள்வியில் முழு கவனம் செலுத்தி, ஜோதிடரிடமும் இறைவனிடமும் முழு நம்பிக்கை வைத்து உண்மையான மனநிலையுடன் கேட்க வேண்டும். சோதிப்பதற்காகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரசன்னம் சரியான பதிலைத் தராது.