Jamakkol Prasannam Software

ஜாமக்கோள் பிரசன்னம் சாஃப்ட்வேர்

மீனம்
பாம்பு 335° 39'
சூரியன்
(10° 55')
சுக்கிரன்
(29° 47')
சனி
(10° 33')
மேஷம்
சந் 20° 39'
ரிஷபம்
மிதுனம்
சனி 65° 39'
சந்திரன்
(10° 55')
குரு
(21° 12')
கும்பம்
செவ்வாய்
(24° 02')
புதன்
(15° 24')
ராகு
(13° 31')
மாந் (16°55')

ஜாமக்கோள் பிரசன்னம் சாஃப்ட்வேர்

Wednesday Jamam # 5

Thu, 26-Mar-2026 12:48:41 AM

ஊர்: Thiruvarur

சூரிய உதயம்: 06:14 AM
சூரிய அஸ்தமனம்: 06:19 PM

jamakkolprasannam.com
கடகம்
சுக் 110° 39'
(ரா.கா) (10°55')
மகரம்
சூரி 290° 39'
(கவி) (7°53')
ஆரு (22°06')
சிம்மம்
கேது
(13° 31')
தனுசு
செவ் 245° 39'
லக் (12°51')
விருச்சிகம்
துலாம்
குரு 200° 39'
(எம) (10°55')
கன்னி
புத 155° 39'
உத (26°33')

Save a copy of this chart and notes in your email.

கோச்சார கிரக நிலைகள்

கிரகம் / புள்ளி ராசி பாகை நட்சத்திரம் - பாதம்
லக்னம் தனுசு 12° 51' மூலம் - 4
சூரியன் மீனம் 10° 55' உத்திரட்டாதி - 3
சந்திரன் மிதுனம் 10° 55' திருவாதிரை - 2
செவ்வாய் கும்பம் 24° 02' பூரட்டாதி - 2
புதன் கும்பம் 15° 24' சதயம் - 3
குரு மிதுனம் 21° 12' புனர்பூசம் - 1
சுக்கிரன் மீனம் 29° 47' ரேவதி - 4
சனி மீனம் 10° 33' உத்திரட்டாதி - 3
ராகு கும்பம் 13° 31' சதயம் - 3
கேது சிம்மம் 13° 31' பூரம் - 1

பிரசன்ன ஸ்புடங்கள்

கிரகம் / புள்ளி ராசி பாகை நட்சத்திரம் - பாதம்
உதயம் கன்னி 26° 33' சித்திரை - 1
ஆருடம் மகரம் 22° 06' திருவோணம் - 4
கவிப்பு மகரம் 7° 53' உத்திராடம் - 4
மாந்தி கும்பம் 16° 55' சதயம் - 4

ஜாம கிரக நிலைகள்

கிரகம் / புள்ளி ராசி பாகை நட்சத்திரம் - பாதம்
ஜாம பாம்பு மீனம் 5° 39' உத்திரட்டாதி - 1
ஜாம சூரியன் மகரம் 20° 39' திருவோணம் - 4
ஜாம செவ்வாய் தனுசு 5° 39' மூலம் - 2
ஜாம குரு துலாம் 20° 39' விசாகம் - 1
ஜாம புதன் கன்னி 5° 39' உத்திரம் - 3
ஜாம சுக்கிரன் கடகம் 20° 39' ஆயில்யம் - 2
ஜாம சனி மிதுனம் 5° 39' மிருகசீரிஷம் - 4
ஜாம சந்திரன் மேஷம் 20° 39' பரணி - 3

பஞ்சாங்க குறிப்புகள்

கிழமை: வியாழன்
நட்சத்திரம்: திருவாதிரை
திதி: அஷ்டமி (வளர்பிறை)
யோகம்: சௌபாக்யம்
கரணம்: பத்திரை
ராகு காலம்: 01:30 PM - 03:00 PM
எமகண்டம்: 06:00 AM - 07:30 AM
குளிகை: 09:00 AM - 10:30 AM
நல்ல நேரம்: காலை 10:30-11:30 & மாலை 06:00-07:00
கௌரி நல்ல நேரம்: பகல் 12:00-01:00 & இரவு 07:30-08:30
தற்போதைய கௌரி நிலை: உதி (சுமார்)

Jamakkol Prasannam Software | ஜாமக்கோள் பிரசன்னம்

கடந்த கால நிகழ்வுகளையும், நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் சேர்த்து எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவதே சிறந்த Online Jamakkol Prasannam Calculator-இன் நோக்கமாகும்.

Jamakkol Prasannam (ஜாமக்கோள் பிரசன்னம்) என்பது என்ன?

பிரசன்னம் (Prasannam) என்பது ஜோதிடத்தின் ஒரு முக்கிய சிறப்புப் பிரிவாகும். இது ஒருவரின் பிறப்பு ஜாதகத்தை (Birth Chart) அடிப்படையாகக் கொள்ளாமல், கேள்வி கேட்கப்படும் நேரத்திற்கு ஒரு ஜாதகம் கணித்து பலன் கூறும் முறையே பிரஸ்னம் ஆகும். பிரஸ்னம் என்ற சொல்லே காலப்போக்கில் மருவி பிரசன்னம் என மாறிவிட்டது.

நமது ஜோதிடத்தில் 36 வகையான பிரசன்னங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றதும், நவீன காலத்திற்கும் பயன்படும் வகையில் துல்லியமாக இருப்பதும் நமது ஜாமக்கோள் பிரசன்ன முறையே ஆகும்.

பிரசன்னமும் ஆகாச ஆவணமும் (Akashic Records)

நாம் செய்யக்கூடிய செயல்கள், மறைக்கக் கூடிய விஷயங்கள், நம்முடைய சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும். இதை ஆகாச ஆவணம் (Akashic Records) என்று குறிப்பிடுவர். உதாரணத்திற்கு, ரேடியோவில் உள்ள அலைவரிசை போன்று மனிதனின் எண்ணங்களும் பிரபஞ்ச அலைவரிசையில் பதிவு செய்யப்படும்.

பிரபஞ்சம் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு தகவலைக் கொடுக்க முயற்சி செய்கிறது. அதன் விளைவாக அவருக்கு கேள்விகள் மனதில் தோன்றுகின்றன. அந்தக் கேள்விக்கான பதில்கள் பிரபஞ்சத்திடமே உள்ளது.

பிரபஞ்சத்திற்கும் கேள்வி கேட்பவருக்கும் இடையே ஜோதிடர் ஊடகமாகச் செயல்பட்டு, பிரபஞ்சத்தின் பதிலை ஜாம கிரகங்கள் மூலம் பெற்று கேள்வியாளருக்கு அவரது கேள்விக்கான பதிலை நாம் அளிக்கின்றோம். ஜாம கிரகங்கள் மூலம் பதிலை அளிப்பதால் இதை ஜாமக்கோள் பிரசன்னம் என்று அழைக்கின்றோம்.

ஜாமக் கிரக ஆருடம் என்றால் என்ன?

ஜாமக் கிரகங்களை பிரசன்ன கிரகங்கள் என்றும் அழைப்போம். இந்த ஜாமக் கிரகங்களே பிரசன்னம் பார்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு ஜாமத்திலும் ஜாம கிரகங்கள் 90 நிமிடம் ஆட்சி செய்யும். அந்த 90 நிமிடத்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் மாறும் ஆருடத்தை வைத்து, ஜாம கிரகங்கள் என்னென்ன தகவல்களை அளிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும் முறையே ஜாமக் கிரக ஆருடம் ஆகும்.

ஜாமக்கோள் பிரசன்னம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்

நேரக் கணக்கீடுகள் மற்றும் 16 ஜாமங்கள்

ஜாமக்கோள் = ஜாமம் + கோள். ஒரு ஜாமம் என்பது 90 நிமிடங்களைக் குறிக்கும். இந்த 90 நிமிடத்தில் கோள் என்று குறிப்பிடக்கூடிய எட்டு ஜாமக் கிரகங்கள் ஆட்சி செய்யும்.

பகல் மற்றும் இரவு நேர ஜாமங்கள் தொடங்கும் ராசிகள்:

ஜாமம்பகல் நேரம்இரவு நேரம்தொடங்கும் ராசி
1 வது ஜாமம்AM 6:00 - 7:30PM 6:00 - 7:30மீனம்
2 வது ஜாமம்AM 7:30 - 9:00PM 7:30 - 9:00மகரம்
3 வது ஜாமம்AM 9:00 - 10:30PM 9:00 - 10:30தனுசு
4 வது ஜாமம்AM 10:30 - 12:00PM 10:30 - 12:00துலாம்
5 வது ஜாமம்PM 12:00 - 1:30AM 12:00 - 1:30கன்னி
6 வது ஜாமம்PM 1:30 - 3:00AM 1:30 - 3:00கடகம்
7 வது ஜாமம்PM 3:00 - 4:30AM 3:00 - 4:30மிதுனம்
8 வது ஜாமம்PM 4:30 - 6:00AM 4:30 - 6:00மேஷம்

8 ஜாமக்கோள் கிரகங்கள் மற்றும் அவற்றின் வேறு பெயர்கள்:

ஜாமக்கோள் பிரசன்னத்தின் 3 முக்கிய தூண்கள்

1. உதயம் (Udayam) - கடிகாரத்தில் சின்ன முள்

உதயம் என்பது கேள்வியையும், கேள்விக்கு உரிய நபரையும், எதிர்காலத்தையும் குறிப்பிடும். இது ராசி கட்டத்தில் முன்னோக்கிச் செல்லும்.

2. ஆருடம் (Aarudam) - கடிகாரத்தில் நிமிட முள்

ஆருடம் என்பது கடந்த கால நிகழ்விலிருந்து தற்சமயம் நடந்து கொண்டிருப்பது வரை குறிப்பிடும். இது கடிகார நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதுவும் ராசி கட்டத்தில் முன்னோக்கிச் செல்லும்.

3. கவிப்பு (Kavippu) - கடிகாரத்தில் நொடி முள்

கவிப்பு என்பது செயலுக்கான விளைவுகளைப் பற்றியும், ரகசியங்களையும் குறிப்பிடும். ஆருடத்தைப் போலவே வேகமான நகர்வைக் கொண்டது, ஆனால் இது ராசி கட்டத்தில் பின்னோக்கிச் செல்லும்.

பிரசன்ன ஆருடத்தின் 17 முக்கிய மூல நூல்கள்

  1. சினேந்திர மாலை
  2. ஞான பிரதீபிகை
  3. பிரஸ்ன மார்க்கம்
  4. கிருஷ்ணீயம்
  5. சப்பண்ணா
  6. பிரஸ்ன அனுஷ்டான பத்ததி
  7. பிரஸ்னாயனம்
  8. பிரஸ்ன ஞானம்
  9. பிரஸ்ன சங்கிரஹா
  10. பிரஸ்ன ரத்னா
  11. பிரஸ்ன தந்திரா
  12. நீலகண்ட நிதி
  13. சங்கேத நிதி
  14. புவன தீபிகா
  15. சட் பஞ்சகிகா
  16. கண்ட பரணம்
  17. சிந்தாமணி

ஜாமக்கோள் பிரசன்னம் எதற்கெல்லாம் பார்க்கலாம்?

பொதுவாக ஜாதகம் இல்லாதவர்களுக்கும், அல்லது ஜாதகத்தில் காண முடியாத உடனடி கேள்விகளுக்கும் பிரசன்னம் மூலம் துல்லியமான விடை காண முடியும். இன்றைய நவீன காலத்தில் மக்கள் அதிகமாகக் கேட்கும் கேள்விகள்:

பிரசன்னம் எப்பொழுது பலன் தராது?

கேள்வி கேட்பவரும் (கேள்வியாளர்), பதில் அளிப்பவரும் (ஜோதிடர்) ஆத்மார்த்தமான சிந்தனையில் இல்லாமல், மனம் ஒன்றிப்போகாமல் வேண்டா வெறுப்பாக பிரசன்னம் பார்த்தால் பிரசன்னம் கண்டிப்பாகத் தவறான பதிலையே வழங்கும் அல்லது பலன் தராது. ஆத்மார்த்தமான சிந்தனை இருப்பவருக்கு மட்டுமே பிரசன்னம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

ஜாமக்கோள் பிரசன்னம் மூலம் அறியக்கூடிய 70 முக்கிய வாழ்வியல் நிகழ்வுகள்

  1. திருமண பிரசன்னம்
  2. காதல் திருமண பிரசன்னம்
  3. குழந்தை பாக்கிய பிரசன்னம்
  4. தொழில் பிரசன்னம்
  5. மருத்துவ பிரசன்னம்
  6. அமானுஷ்ய பிரசன்னம்
  7. தோஷங்கள் பிரசன்னம்
  8. அரசியல் பிரசன்னம்
  9. வழக்குகள் பிரசன்னம்
  10. குடும்ப பிரசன்னம்
  11. வாஸ்து பிரசன்னம்
  12. குலதெய்வம் பிரசன்னம்
  13. செய்வினை பிரசன்னம்
  14. காணாமல் போன பொருட்கள்
  15. திருட்டுப் பிரசன்னம்
  16. காணாமல் போன மனிதர்கள்
  17. கண்டம் பிரசன்னம்
  18. கடன் பிரசன்னம்
  19. வண்டி வாகன பிரசன்னம்
  20. வேலை பிரசன்னம்
  21. தேர்தல் பிரசன்னம்
  22. வெளிநாட்டு பிரசன்னம்
  23. விவாகரத்து பிரசன்னம்
  24. போர் (நீர்) பிரசன்னம்
  25. பிறந்த கால பிரசன்னம்
  26. இஷ்ட தெய்வம் அறியும் பிரசன்னம்
  27. சூதாட்ட பிரசன்னம்
  28. பொதுவான பிரசன்னம்
  29. சந்திப்பு தொடர்பான பிரசன்னம்
  30. கர்ம வினையை அறியும் பிரசன்னம்
  31. பயணம் தொடர்பான பிரசன்னம்
  32. ராசி, நட்சத்திரம் அறியும் பிரசன்னம்
  33. தெய்வத்தின் நிலை அறியும் பிரசன்னம்
  34. உபாசனை பிரசன்னம்
  35. கனவு பிரசன்னம்
  36. பரிகாரங்கள் பிரசன்னம்
  37. நிலப் பிரசன்னம்
  38. நல்லவர்களா, கெட்டவர்களா அறியும் பிரசன்னம்
  39. எண்ணிக்கை பிரசன்னம்
  40. கணவன் மனைவி பிரசன்னம்
  41. கல்வி பிரசன்னம்
  42. பிறப்பது ஆண் / பெண் குழந்தை பிரசன்னம்
  43. வீடு தொடர்பான பிரசன்னம்
  44. மூன்றாம் நபருக்கான பிரசன்னம்
  45. ஆடு, மாடு தொடர்பான பிரசன்னம்
  46. வளர்ப்புப் பிராணிகள் பிரசன்னம்
  47. பங்குச்சந்தை பிரசன்னம்
  48. சினிமா பிரசன்னம்
  49. விவசாய பிரசன்னம்
  50. கோவில் பிரசன்னம்
  51. பெயர் பிரசன்னம்
  52. கருக்கலைப்பு பிரசன்னம்
  53. தோஷ நிவர்த்தி அறியும் பிரசன்னம்
  54. உலகியல் ஜோதிட பிரசன்னம்
  55. சத்துரு (பகையாளி) பிரசன்னம்
  56. சொத்து பிரசன்னம்
  57. விளையாட்டு பிரசன்னம்
  58. சீமந்த பிரசன்னம்
  59. உணவு பிரசன்னம்
  60. மின்சார துண்டிப்பு பிரசன்னம்
  61. மழை பிரசன்னம்
  62. ஆடையின் நிறம் தொடர்பான பிரசன்னம்
  63. திசை தொடர்பான பிரசன்னம்
  64. கண் திருஷ்டி, மந்திர பாதிப்பு
  65. பித்ரு தோஷம் உள்ளதா?
  66. சாபம் உள்ளதா?
  67. நாக தோஷம் உள்ளதா?
  68. மாந்தி தோஷம் உள்ளதா?
  69. கிரக பாதிப்பு உள்ளதா?
  70. இறப்பு பிரசன்னம்